புதினா மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸ் குடித்தால்,நம் குடலில் நேரும் அதிசயம்

 
lemon

பொதுவாக பலரும் அசைவம் சாப்பிட்டதும் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதுண்டு .இது நம் செரிமான அமைப்பையே கெடுத்து விடும் .இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.அசைவம்  சாப்பிட்டவுடன் கொஞ்சம் சூடு நீர் குடிக்க வேண்டும் .குளிர்ந்த நீர் குடிக்க கூடாது .அது நம் செரிமான அமைப்பையே கெடுத்து விடும் .
2.இந்த சூழ் நிலையில் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. பப்பாளியை நீங்கள் மிகச் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம் அல்லது ப்ரூட் சாலட்டுகளில் பப்பாளியை சேர்த்து சாப்பிட்டால் நல்ல செரிமானம் ஏற்படும்
4.அசைவ உணவு செரிக்காமல் அவஸ்தைப்படும் போது, சீரக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக அற்புதமாக நடந்து உடனே பசியெடுக்க ஆரம்பிக்கும்

mint
5.அசைவ சாப்பாட்டிற்கு பின் புதினா மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸ் குடித்தால், அவை செரிமான பிரச்சனையை சரி செய்யும் ,
6.அவை வாயுபிடிப்பு, வயிற்று வலி, வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கி அடுத்த வேலை உண்ண உங்கள் குடலை தயார் செய்யும்
7.வாழைப்பழம் உங்களது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுத்து செரிமானத்தை சீராக்கும்
8.சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் சிறப்பாக இருக்கும்