மலிவான கொய்யா இலையில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக கொய்யா மரம் ஒரு அற்புதமான கற்பக விருட்சம் என்று கூறலாம் .இந்த மரத்திலிருந்து வரும் அனைத்து பொருட்களும் நமக்கு மருத்துவ குணம் கொடுக்க கூடியது .உதாரணமாக
கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.மேலும் கொய்யாவின் நன்மைகளை இந்த பதிவில் நாம் காணலாம்
1.பொதுவாக கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, மற்றும் செங்காய் குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளை குணமாக்கும் ஆற்றல் கொண்டது .
2.மேலும் கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறி நமக்கு ஆரோக்கியம் கொடுக்கும்
3.மேலும் ஆரோக்கியம் தரும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
4.ஆரோக்கியம் தரும் கொய்யா பழத்தில் கலோரிகளில் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது
5.ஆரோக்கியம் தரும் கொய்யா பழம் உங்கள் பசியைத் தணிப்பது மட்டுமல்லாமல் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.
6.மேலும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற ஆரோக்கியமான பழங்களை விட ஆரோக்கியம் தரும் கொய்யாவில் சர்க்கரை குறைவாக உள்ளது.
7. ஆரோக்கியம் தரும் கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறையும்
8.ஆரோக்கியம் தரும் கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன
9.ஆரோக்கியம் தரும் கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
10.ஆரோக்கியம் தரும் கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.