இளநீரில் இந்த பொருளை கலந்து குடித்தால் கிட்னி கற்களை தடுக்கலாம்

பொதுவாக இளநீரிலும் தேனிலும் ஏராளமான மருத்துவ குணமுள்ளதால் இதை ஆயுர்வேத மருத்துவர்கள் பல நோய்களை குணப்படுத்த சிபாரிசு செய்கின்றனர் .இதன் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.அப்படிப்பட்ட இந்த இளநீரில் தேனை கலந்து குடித்தால் நம் உடல் பல ஆரோக்கியம் பெறுகின்றது .நம் வயிற்றில் சுரக்கும் அதிகமான அமிலத்தன்மையை இந்த கலவை குணப்படுத்துகிறது .
2.இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் நமக்கு விரைவில் முதுமை தோற்றம் வருவதை தடுக்கிறது .
3.இளநீர் தேன் கலந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
4. தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இளநீரில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவி செய்கிறது..
5.இந்த இரண்டும் உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.
6.சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது தேன் கலந்த இளநீர். இளநீர் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.
7.அதுமட்டுமல்லாமல் இளநீர் தேன் கலவை சிறுநீரக கற்களை தடுக்கும் சக்தி கொண்டது.