கிட்னியில் உண்டாகும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் இந்த ஜூஸ்

பொதுவாக வாழை மரத்திலிருந்து கிடைக்கும் வாழை தண்டு சுவையில் துவர்ப்பாக இருப்பதால் இதை பலர் ஒதுக்கி விடுவதுண்டு .ஆனால் இதன் நன்மை தெரிந்தால் இதை விடவே மாட்டிர்கள் .அந்தளவுக்கு இதில் ஆரோக்கியம் அடங்கியுள்ளது இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.கிட்னியில் உண்டாகும் சிறுநீரக கற்களை வெளியேற்ற பலர் ஆங்கில மருந்துகளை நோக்கி ஓடுகின்றனர் .ஆனால் வாழைதண்டுவின் குணம் தெரிந்தால் அப்படி ஓடமாட்டார்கள் .
2.இந்த வாழை தண்டை ஜூஸ் போட்டு குடித்தால் கிட்னி கற்கள் கரைந்து வெளியேறிவிடும் .செலவில்லாமல் வாழை தண்டு மூலம் அந்த கற்களை கரைத்து விடலாம்
3.வாழைத்தண்டில் ஜூஸ் போட்டு காலையில் வெறும் வசாயிற்றில் குடிப்போருக்கு எடை குறைய வாய்ப்புண்டு ,
4.ஏனெனில் இந்த ஜூஸ் வயிறை நிரப்பி பசி எடுக்காமல் செய்வதால் நாம் உணவருந்த மாட்டோம் ,அதனால் எடை குறைந்து விடும்
5.காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்து , உண்டாகும் நெஞ்செரிச்சல் குணமாகும்
6.நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து.