கிட்னி கல்லை இந்த இயற்கையான முறையில் கரைக்கலாம் .
பொதுவாக தவறான வாழ்வியல் முறையால் சிறுவர்கள் கூட கிட்னியில் கல் வந்து அவதி படுகின்றனர் இந்த கிட்னி கற்களை கரைக்க இயற்கை மருத்துவத்தில் செலவேயில்லாமல் கரைக்க வழி சொல்கிறோம் .
1.மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் கொடுமையான வலி தரும் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர்.
2.ஆனால் சில மருத்துவ குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மருந்து மாத்திரையின்றி இவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
3.முதலில் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிறுநீரக மருத்துவர்கள் கூறுகின்றனர் .
4.காய்ந்த துளசி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஊற வையுங்கள் .
5.பின்னர் அந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
6.கிட்னி கல்லை கரைக்க மாதுளம் பழச்சாறு அருந்தினால் கற்கள் கரையும்
7.கிட்னி கற்களுக்கு எலுமிச்சை நீர் அருந்தினால் அந்த கற்கள் நீங்கி ஆரோக்கியம் பிறக்கும் .