சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கு பயன்படும் காய் இது

 
kidney

பொதுவாக பாகற்காய் என்றதும்  அதன் கசப்பு சுவை நம்மை  ஓட வைக்கிறது .இதனால் பல வீடுகளில் பாகற்காய் எப்போதாவதுதான் சமைப்பார்கள் .ஆனால் பாகற்காயில் பல நன்மைகள் அடங்கியுள்ளது இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்

 1.டைப் 2 வகை நீரிழிவு நோய் பலரை  கடுமையான பாதித்து படாத பாடு படுத்தி வருகிறது  இந்த  வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது.
2.பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து அவர்களை பாதுகாக்கிறது

kidney.
3.இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கி அவர்களின் சுகரை கட்டுக்குள் வைக்கிறது  பாகற்காய்.
4.நார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது.
5.மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் அது அவர்களுக்கு உதவுகிறது  
6. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பாகற்காய் உதவுகிறது.
7.சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது பாகற்காய் உதவுகிறது. மேலும் கிட்னி நன்றாக வேலை செய்ய விரும்புவோர் அடிக்கடி இந்த காயை பொறியலாகவோ .பச்சடியாகவோ சமைத்து சாப்பிடலாம் .