குளிர்காலத்தில் எந்த கீரை நம் உடலுக்கு நல்லதுன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை செய்ய கூடியவை .இந்த பதிவில் வெந்தய கீரை மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி பார்க்கலாம்
1.குளிர்காலத்தில் வெந்தயக்கீரை சாப்பிடும் போது உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.
2.நம் அன்றாடம் உண்ணும் உணவுகள் உணவுகளில் பச்சை காய் கறிகள் மற்றும் கீரை வகைகளை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.
3.அதிலும் குறிப்பாக வெந்தயக் கீரையில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.
4.இந்தக் கீரையை குளிர்காலத்தில் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது.
5.வெந்தய கீரையின் விதைகள் சர்க்கரை அளவை குறைக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்
6.ஆனால் வெந்தயக் கீரையும் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகவே இருக்கிறது.
7.இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
8.மேலும் இந்த கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது
9.ஏனெனில் இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
இது எலும்புகளுக்கும் நன்மையை கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் செரிமான பிரச்சனைகளால் வரும் வயிற்று வலி மலச்சிக்கல் அஜீரணம் போன்ற நோய்களுக்கு வெந்தயக்கீரை மருந்தாக இருக்கிறது.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் விரைவாகவே நல்ல மாற்றம் கிடைக்க வழி வகுக்கும்.