கற்பூர வள்ளியின் அற்புதமான மருத்துவ குணங்கள்

 
cold

கற்பூர வல்லி இலைகள் சளி ,இருமல் ,சுவாச பிரச்சனைகளை போக்கும்.இதன் நன்மை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்  
1.இது விஷகிருமிகளை கொல்லும் என்பதால் இதை முன்னோர்கள் வீட்டில் வளர்த்து வந்தனர் .
2.கொடி போல் படர்ந்து வளரும் இதில் கால்சியம் ,பொட்டாசியம்  மெக்னீசிய சத்துக்கள் அடங்கியுள்ளது .இதை வைத்து சளியை கொல்லும் கஷாயம் எப்படி தயாரிப்பது என்று காணலாம்

cold

3.கற்பூரவல்லி இலைகளை உங்கள் கையாலேயே சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். 4.அரிசித் திப்பிலி, மிளகு இந்த 2 பொருளை மட்டும் ஒரு சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
5.அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கிழித்த கற்பூரவள்ளி இலைகளையும், இடித்து வைத்திருக்கும் அரிசித்திப்பிலி மிளகையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6.இதோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து மிதமான தீயில் இந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் இந்த பொருட்கள் தண்ணீர் கொதித்தாலே போதும்.
7.அதன் பின்பு வடிகட்டி அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும்.