சாதம் வடித்த கஞ்சியினை முழங்காலில் ஊற்றி வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பொதுவாக மூட்டு வலிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் கால் மூட்டுகளை சுற்றியுள்ள எலும்புகளில் உள்ள ஜவ்வுகள் தேய்ந்து போவதுதான் காரணம் .இதற்கு உடல் எடையும் ஒரு காரணம் .இதை எப்படி இயற்கை முறையில் குணமாக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.அதிக உடல் எடையிருந்தால் இந்த மூட்டு வலி பிரச்சினை படுத்தியெடுக்கும் .இந்த மூட்டு வலிக்கு சாதம் வடித்த கஞ்சியினை தினமும் வலியுள்ள முழங்காலில் ஊற்றி வந்தால் நிவாரணம் கிடைக்கும் .
2.மேலும் பூண்டு தைலமும் ,வெந்தய பேஸ்டையும் வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் உண்டு .மேலும் சில இயற்கை வழிகளை பார்க்கலாம்
3.வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் மூட்டு வலி உங்க வீட்டை விட்டு ஓடி விடும்
4.விளக்கெண்ணைய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் வலி உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் மூட்டு வலி பரந்து விடும்
5.சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டி வந்தால் போதும் மூட்டு வலி குறையும்
6.சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் பத்துப் போட்டு வந்தால் மூட்டு வலி வீட்க்குள் வராது .
7.எருக்கிலையை வதக்கி வெள்ளைத் துணியில் வைத்து வலி உள்ள பகுதிகளில் கட்டி வந்தால் போதும்
8.கொட்டம்சுக்காதி போன்ற மூலிகை தைலங்களை வாங்கி தேய்த்து வரும் போது வலி பஞ்சாய் பறந்து விடும்