குப்பைமேனி தைலம் பூசினால் எந்த நோய்க்கு ஆப்பு வைக்கலாம் தெரியுமா ?

 
pimples

பொதுவாக வெளியே தோலில் அரிப்பு இருந்தால் அது உடலின் உள்ளே என்ன பாதிப்பு என்று கண்டறிய வேண்டும் .இந்த அரிப்பு பிரச்சினையை எப்படி குணப்படுத்தலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.பொதுவாக உள்ளுருறுப்புகளில் உண்டாகும் பாதிப்பே தோலில் அரிப்பாக வெளிப்படுத்தும் .
2.மேலும் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருத்தல் ,நுரையீரல் பிரச்சினை போன்றவற்றாலும் தோலில் அரிப்பு தோன்றலாம் .

tips to cure itching
3.தோல் அரிப்புக்கு பரங்கிப்பட்டை சூரணம் 2 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி இவற்றை மூன்று வேளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க குணமாகும் .
4.மேலும் தோல் அரிப்புக்கு அருகன் தைலம், குப்பைமேனி தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை தோல் அரிப்பு ஏற்படும் இடத்தில் பூசலாம்.
5.சிலருக்கு தோல் வறட்சி தோன்றலாம் .இதற்கு  கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கழுவி விடுங்கள் .பின்னர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் அந்த கற்றாழை ஜெல்லை அரைத்து தோல் வறண்ட பகுதியில் பூச வறட்சி நீங்கும்.