கை காலில் வீக்கம் இருந்தால் இதை செய்யுங்க சரியாகும்
பொதுவாக கர்ப்பிணி பெண்கள் 10 மாதம் தூக்கம் துறந்து ,உடல் நல பிரச்சனைகளை சந்தித்துதான் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.பொதுவாக கர்ப்பகாலத்தில் உடலின் ரத்த ஓட்டத்தின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் வழக்கத்தைவிட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இதனால் உடல் உறுப்புகள் வீக்கமடைவதற்குக் காரணமாக அமையலாம்.
2. கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது கர்ப்பப்பை பெரிதாகிறது. கர்ப்பப்பையின் அருகில் உள்ள ரத்தக்குழாய்கள் அழுத்தத்துக்கு உள்ளாகிறது ,
3.ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது சருமத்தின் அடியில் நீர் கோத்துக்கொண்டு வீக்கம் ஏற்படுகிறது.
4.கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது வீக்கம் ஏற்படலாம்.
5.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் உப்புச் சத்து அதிகரிக்கும் போது வீக்கம் ஏற்படலாம்.
6.அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பது, கைகால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருந்தாலோ வீக்கம் ஏற்படலாம்.
7.இந்த வீக்கத்தை குறைக்க சுடுநீரில் ஒத்தடம் கொடுக்கலாம் .
8.அல்லது கால்களுக்கு கீழே தலையணை வைக்கலாம் ,மேலும் வலது பக்கம் திரும்பி படுக்க வேண்டும் .நிறைய தண்ணீர் குடித்து ,நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்