இரவில் சிறிதளவு வெந்நீர் குடித்தால் என்ன நன்மை உண்டாகும் தெரியுமா ?

 
water

பொதுவாக சித்த  வைத்தியத்தில் சிலவற்றை நம் வீட்டில் உள்ள கிச்சன் பொருட்களை வைத்தே குணப்படுத்தலாம் .அந்த வீட்டு வைத்தியம் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சளி பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும்.

2.உடலில் இம்மியூனிட்டி பவர் உண்டாக தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருமல், சளி போன்ற நோய்கள் குணமாகும்.

water

3.உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுவோர் தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் சில மாதத்தில் மாற்றம் காணலாம் ,

4.முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர ஆண்களுக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

 5.இரவில் தினந்தோறும் சிறிதளவு வெந்நீரோ அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி சாப்பிட்ட பின் படுக்கைக்கு சென்றால் நல்ல தூக்கம் உண்டாகும்

6.துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வந்தால் பல் வலி பஞ்சாய் பறந்து போகும் .

7.உடல் உஷ்ணம் குறைய அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாகும் .