எந்த உணவில் தேன் கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக தேன் சித்த வைத்தியத்தில் ஒரு மருந்து பொருளாக பயன் படுகிறது .தேனை தனியாக சாப்பிட்டாலும் ,பல்வேறு பொருளுடன் கலந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மை புரியும் .தேன் மூலம் என்னென்னெ பயன்களை நாம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு தூக்கமின்மை இருக்கும் .அவர்கள் பாலில் தேன் கலந்து இரவில் நீங்கள் அதை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல தூக்கம் கிடைக்கும்.
2.இப்படி பாலில் தேன் கலந்து இரவில் குடித்து வரும் பொழுது இதயம் ஆரோக்கியமாய் இருக்கும்
3.சிலருக்கு சக்தி குறைவாய் இருக்கும் .பழச்சாறுகளுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.
4.மேலும் மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது புதிய ரத்தம் வருவதை அதிகரிக்கும்.
5.சிலருக்கு இருமல் இருக்கும் .எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது இருமலை குணமாக்கும்.
6.சிலருக்கு இன்சுலின் குறைவாய் இருக்கும் .நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும்.
7.சிலருக்கு தூக்கம் வராமல் இருக்கும் .ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது அது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
8.சிலருக்கு உடல் சூடு அதிகம் இருக்கும் .ரோஜாப்பூ குல்கந்துடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது அது உடலில் உள்ள சூட்டை தணிக்கும்.
9.உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் மேற்கண்ட முறையை முயற்சி செய்யலாம்.
10.தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாலில் தேன் கலந்து குடித்துப் பாருங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.