கண்ட தேநீர் குடிப்பதை விட இந்த மூலிகை தேனீர் குடிச்சி ஆரோக்கியம் பெருங்க

 
green tea health tips

பொதுவாக டீ குடிக்கும் பழக்கம் இன்று மக்களிடையே அதிகரித்துள்ளது .இந்த பால் கலந்த தேனீர் குடிப்பதற்கு பதிலாக சில மூலிகைகளை கொண்டு ஆரோக்கியம் மிக்க தேனீர் எப்படி தயாரித்து நம் ஆரோக்கியம் எப்படி காக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பால் கலக்காத மூலிகை டீ தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

tea shop

2.ஆரோக்கியம் மிக்க துளசி டீ தயாரிக்கும் முறை : சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்தால் துளசி இலை டீ தயார். இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

3.ஆரோக்கியம் மிக்க ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறை : காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து ஆவாரம் பூ டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தியும் அல்லது புதிதான ஆவாரம் பூக்களை பயன்படுத்தியும் செய்யலாம்.

4.ஆரோக்கியம் மிக்க கொத்தமல்லி டீ தயாரிக்கும் முறை : கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

5.ஆரோக்கியம் மிக்க  செம்பருத்திப்பூ டீதயாரிக்கும் முறை : ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் செய்து சுவைக்கலாம்.

6.ஆரோக்கியம் மிக்க  புதினா இலை டீதயாரிக்கும் முறை : புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

7.ஆரோக்கியம் மிக்க முருங்கை இலை டீதயாரிக்கும் முறை : முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் முருங்கை இலை டீ தயார்.

8.ஆரோக்கியம் மிக்க கொய்யா இலை டீ தயாரிக்கும் முறை : கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்