ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிகள்

 
heart

பொதுவாக இதய நோய்க்கு காரணம் சரியாக உடலை காக்க தவறியதுதான் என்று கூறலாம் .இந்த ஹார்ட் அட்டாக்குக்கு பல காரணங்களை கூறலாம் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. இதய நோய்க்கு முக்கியமாக காண்பது சர்க்கரை நோய் ,உடல் பருமன் ,புகை மற்றும் மது பழக்கம் ,உடற் பயிற்சியின்மை ,மேலும் அதிக கெட்ட கொழுப்பு உடலில் சேருவது எனலாம் .
2.இந்த ஹார்ட் அட்டாக் வர மன அழுத்தமும் முக்கிய காரணம்  

heart
3.இந்த உயிரை பறிக்கும் இதய நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
4.அதில் முதன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், புகை மற்றும் மதுப் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
5.ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க உடற்பயிற்சி செய்வதற்கு என தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
6.ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க நம் மனதை ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்வது ..
7.ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க குடும்பப் பின்னணியில் இதய நோய் பாதிப்பு இருந்தாலோ அல்லது ரிஸ்க் பிரிவில் இருந்தாலோ, உரிய மருத்துவருடன் கலந்து ஆலோசித்து,  பரிசோதனைகள் செய்யலாம் .