வாரம் ஒரு முறை இதை செய்தால் கருகருன்னு முடி வளரும்

பொதுவாக இன்றைக்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலருக்கு முடி உதிரும் பிரச்சினை இருக்கிறது .இந்த முடி உதிர்தலுக்கு ஒரு இயற்கையான முறையில் ஒரு தீர்வை பின் வருமாறு கூறியுள்ளோம்
படித்து பயன் பெறவும்
1.முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தையும் பச்சை பயறையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
2.இரண்டையும் ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்பு உலர்ந்த காட்டன் துணியில் மூட்டை போல கட்டி எடுத்து கொள்ளுங்கள்.
3.அந்த மூட்டையில் அவை நன்கு முளைவிட்ட பிறகு அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து,இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேருங்கள்.
4..பின்னர் மிக்ஸியை அவற்றை இயக்கி நைசாக அரைத்து எடுத்த பின்பு, அதை தலை முழுவதும் வேரிலிருந்து நுனி வரை நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள்.
5.அதன் பிறகு அலசினால் நுரைக்க ஆரம்பிக்கும். அந்த நுரையே உங்களுக்கு ஷாம்பூ போல செயல்படும். பிறகு தண்ணீர் ஊற்றி தலையை நன்கு அலசி வந்து விடுங்கள்.
6.இது போல வாரம் ஒரு முறை செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி அபரிமிதமாக நிச்சயம் இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.