க்ரீன் டீ நம் உடலின் எந்த நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா ?

 
cholestral

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் குடிக்க வேண்டிய ஐந்து ஜுஸ் பற்றி பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் உடலில் கொலஸ்ட்ரால் இருந்தால் அது நம் உடலுக்கு பல்வேறு நோய்களை கொண்டு வந்து விடுகிறது. இது இதய நோய் அபாயத்தையும் ஏற்படுத்திவிடும். அப்படி உயிருக்கே ஆபத்தை தரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய முறையில் ஐந்து ஜூஸ்கள் குடிக்கலாம்.

green tea health tips

முதலில் குடிக்க வேண்டியது கிரீன் டீ. ஏனெனில் இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இரண்டாவதாக குடிக்க வேண்டியது பெர்ரி. பால் அல்லது தயிரில் இரண்டு கைப்பிடி அளவு பிளாக் பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்றாக அரைத்து குடித்து வர வேண்டும்.

மூன்றாவதாக குடிக்க வேண்டியது கோகோ பானங்கள். ஒரு நாளில் இரண்டு முறை 450 மிகி சாப்பிட்டு வர வேண்டும். நான்காவதாக குடிக்க வேண்டியது தக்காளி ஜூஸ். தக்காளி ஜூஸ் குடிக்கும்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஐந்தாவதாக குடிக்க வேண்டியது சோயாபால். அதிகமான கொழுப்பு சத்து நிறைந்த பாள்களை குடிப்பதை விட சோயா பால் குடிப்பது சிறந்தது.