ஒரு பச்சை வாழைப்பழத்துக்குள் ஒளிந்துள்ள ஓராயிரம் நன்மைகள்
பொதுவாக பச்சை வாழைப்பழத்தில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கிறது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1.பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம்.
2.இதில் வைட்டமின் ஏ சி கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
3.இது ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
4.உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பதால் உடலை பிட்டாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் இதய நோயிலிருந்து வரும் ஆபத்தில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது.
5.மேலும் இது பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைத்து ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது.
6.இது மட்டும் இல்லாமல் உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
7.எனவே ஆரோக்கியம் நிறைந்த பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் பயன்கள் அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.