இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்க எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
Gas Gas

பொதுவாக வாயு தொல்லை இன்று பலருக்கும் இருக்கிறது .இதற்கு உணவு பழக்க வழக்கம் ஒரு காரணம்

உதாரணமாக பருப்பு, வாழைக்காய், உருளை கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, மசாலா உணவுகள், செயற்கை பானங்கள், பால், முளைகட்டிய தானியங்கள் போன்ற உணவுகள் வாயு தொல்லையை உண்டாக்கும் .இவற்றை தவிர்ப்பது நல்லது .மேலும் இந்த பதிவில் வாயு தொல்லையை எப்படி தடுக்கலாம் என்று நாம் பார்க்கலாம்

stomach

1.இரவு உணவை உறங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிடுவது சிறந்தது. உடலில் தண்ணீரின் அளவு குறையும் பொழுது பல பிரச்சனைகள் வருகின்றன. அதில் ஒன்று தான் வாயு தொல்லை.

2.தினமும் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனையை தரும் உணவுகளை அன்றாட உணவுகளில் குறைத்துக் கொள்வது சிறந்தது.

3., கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாக அதிக கார்போஹைட்ரேட்  உள்ள உணவுகள் வாயு தொல்லைக்கு காரணமாக அமைகின்றது.

4.உடல் பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று. தினமும் உடல் பயிற்சி செய்வது வாயு தொல்லையை குறைக்க உதவும்.

5.சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளும் போது ஜீரண பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

6.உணவுக் கழிவுகளை வெளியேற்றும் எண்ணம் வந்தால் உடனே வெளியேற்றி விடுங்கள். அல்லது வாயு தொல்லை அதிகரிக்கும்.

7.இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.

8.பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு பூண்டு.

9.மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம்.