வயிறு வாயுவின் காரணமாக உப்பிக்கொண்டு இருந்தால் இதை செய்யுங்க போதும்
பொதுவாக வயிற்றில் வாயு உண்டாக மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முளைகட்டிய தானியங்கள், வாழைக்காய், முட்டை, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, செயற்கைப் பழச்சாறுகள் போன்றவற்றை உண்ணுதலும் ,சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடுதல் ,காபி டீ அதிகமாக குடித்தல் போன்ற காரணங்களும் ஆகும் .இந்த வாயுவை எப்படி தவிர்க்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.சிலர் நிறைய தண்ணீர் பருகி கொண்டே இருப்பார்கள் ,சிலர் எண்ணெய் பதார்த்தங்கள் அளவில்லாமல் சாப்பிடுவர் .
2.இதனாலும் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இவற்றிலிருந்து எளிதாக நிவாரணம் காண நம் வீட்டில் இருக்கும் எளிய இயற்கை வைத்தியத்தை கையாண்டு பார்க்கலாம். -
3.ஒரு எலுமிச்சை பழச்சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அப்படியே குடியுங்கள் .
4.இது உங்கள் வயிறு உப்பிசத்தை உடனடியாக குறைக்கும் .
5.வயிறு வாயுவின் காரணமாக உப்பிக்கொண்டு இருந்தால் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள் .
6.பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு உணவு உண்டால் வயிறு வலி முதல் உப்பிசம் வரை சரியாகும்