பூண்டை வறுத்து சாப்பிட்டால் எந்த நோயை வறுத்து எடுக்கலாம் தெரியுமா ?

 
Health Benefits of Garlic

பொதுவாக பூண்டு நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் .பூண்டுக்குள் ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .அதனால் நாம் இந்த பதிவில் பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி பார்க்கலாம்

1.பொதுவாக பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை குணமாகி ஆரோக்கியம் பிறக்கும் .

garlic

2.பூண்டு சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இலகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம்.

3.பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் ஹார்மோனைத் தடுக்கின்றன.

4.அடிக்கடி ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுங்கள். இதனால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும்.

5.அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும்.பூண்டு  புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது .

6.அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்.

7.ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு இரத்த நாளங்களில் நுழையும், பேக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

8.அடுத்த ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாகச் செயல்படும். அதன்பிறகுதான், பூண்டின் நிஜமான பெரிய பலன்கள் தெரியத்தொடங்கும்.

9.சிலருக்கு இதய பிரச்சினையிருக்கும் .இந்த இதயம் சார்ந்த பல பிரச்சனைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியை தரும்,

10.மேலும் ஆரோக்கியம் தரும் பூண்டு எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்.