பாடாய் படுத்தி எடுக்கும் பாத வெடிப்புக்கு பக்காவான வைத்திய முறை

 
Foot Massage

பொதுவாக பாத வெடிப்பால் இன்று பலர் நடக்க முடியாமல் அவதி படுகின்றனர் .இந்த பாத வெடிப்பை எவ்வாறு குணமாக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்

1.முதலில் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு கத்தியால் சுரண்டி துகள்களை சேகரியுங்கள்.
2.மெழுகுவர்த்தி எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை. இந்த மெழுகுவர்த்தி தூளுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து விடுங்கள்.

aloe vera
4.பின்னர் அடுப்பில் வைத்து சூடேற்றினால் நன்கு கரைய ஆரம்பிக்கும், கரைந்து கிரீம் போல நமக்கு கிடைத்துவிடும். - விளக்கெண்ணையில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய பாதத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும்.
5.இது கரடு முரடான பாதத்தை சாஃப்டாக மாற்றிக் காட்டும். தேங்காய் எண்ணெய் பாதத்தை பளபளப்புடன் அழுக்குகள் இல்லாமல், நோய்க்கு கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
6.கற்றாழை ஜெல் பாதத்தில் இருக்கும் வெடிப்புகளை மாயமாய் மறைய செய்கிறது.மெழுகில் இருக்கும் வேக்சிங் பாத வெடிப்புகளை விரைவாக போக்கக்கூடிய அற்புதமான சக்தி கொண்டுள்ளது.