முகம் பிரகாசமாய் இருக்க சில இயற்கை வழிகள்

 
pimple

பொதுவாக  நம் வீட்டில் இயற்கையான முறையில் சில பொருட்களை கொண்டு எப்படி முகத்தை பிரகாசிக்க செய்யலாம் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.முதலில் கழுவிய அரிசியை எடுத்து சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். 2.பின்பு அதை 2-3 மணி நேரம் வரை ஊறவைத்துக் கொள்ளுங்கள் .
3.ஊறவைத்த அரிசி தண்ணீரை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து அதை ஒரு போத்தலில் ஸ்பிரேய் பண்ணும் விதத்தில் மூடி வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்
அதன் பின் 2 நாட்களுக்கு முகத்தில் பயன்படுத்த,முகம் பிரகாசமாய் இருக்கும்

face mask
4.ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலை எடுத்து கொள்ளவும். முகத்தை கழுவிய பின்,ஒரு காட்டன் பஞ்சை எடுத்து பாலில் தோய்த்து சிறிய அழுத்தம் கொடுத்து பூசிக் கொள்ளவும்.
5.இக்கலவையை நன்றாக காயவையத்த பின்பு சுடுதண்ணிரீல் முகத்தை கழுவுங்கள்.இப்போது முகம் பிரகாசமாய் இருக்கும்
6.கஸ்தூரி மஞ்சள் ,சந்தனம், காய்ச்சாத பால்  ஒரு கிண்ணத்தில் இந்த மூன்றையும் குழைத்து பேஸ்ட் போல்  ஆக்கிக் கொள்ளுங்கள்
7.பின் அதை முகத்தில் அப்ளை செய்யவும்.சிறிது நேரத்திற்க்கு பின் முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாய் இருக்கும்