வெயில் காலத்தில் கண்களை பாதுகாக்க சில வழி முறைகள்

 
Digital Eye Strain

பொதுவாக கோடை வெயில் காலத்தில் வியர்வை அதிகம் ஏற்பட்டு உடலில் இருந்து அதிகம் நீர் சத்து வெளியேறுகிறது. இந்த வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம் என்று இப்பதிவில் பாக்கலாம்
1.எனவே இத்தகைய காலங்களில் செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகளைத் தவிர்த்து, தூய்மையான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.
2.பருத்தி ஆடைகள் உடலுக்கு காற்றோட்டத்தை தந்து உடல் அதிக வெப்பம் அடையாமல் தடுக்கிறது. .
3.வெயில் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தலைக்கு வெள்ளை நிறத்திலான தொப்பி அணிந்து கொள்ள வேண்டும்
4.அல்லது பருத்தியால் ஆன ஒரு மிகப் பெரிய துண்டை எடுத்து, தலை மற்றும் பின் கழுத்து பகுதியை மறைக்கும் வகையில் கட்டிக்கொள்ள வேண்டும். இது தலை அதிகம் உஷ்ணமடையாமல் பாதுகாக்கும். - 5.வெயில் காலம் வந்தாலே ஆங்கங்கே சாலையோரங்களில் குளிர் கண்ணாடிகள் விற்கும் கடைகள் முளைப்பதை நாம் காணலாம்.

 eye
6.சாலையோரங்களில் விற்கப்படும் இத்தகைய குறைந்த விலை கண்ணாடிகளை வாங்கி அணிந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
7.வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க ஒரு நல்ல கண் மருத்துவரிடம் சென்று கண்களை பரிசோதித்து, உங்கள் கண்களின் தன்மைக்கு ஏற்ப வெயிலின் தீமையான கதிர்களை தடுக்கும் ஆற்றல் கொண்ட தரமான குளிர் கண்ணாடிகளை வாங்கி அணிய வேண்டும்.