மாலைக்கண் நோயை குணமாக்க எந்த காய் சாப்பிடணும் தெரியுமா ?

 
carot

பொதுவாக காய் கறிகளில் ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு நன்மையுண்டு .அந்த வகையில் விலை மலிவான கேரட்டில் நம் கண் முதல் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் பல நன்மையுண்டு .அந்த வகையில் இந்த பதிவில் கேரட் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம்

1.பொதுவாக கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைய  உள்ளது.

carot

2.கேரட்டை  தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்து குறைக்கப்படும்.

3.கேரட்டை  பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும். இந்த பச்சையான கேரட் மூலம் இதய நோய்களை தடுக்க முடியும்.

4.கேரட்டில் நார் சத்திருப்பதால் தினமும் ஒரு கப் அளவு கேரட் 3 வாரம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.

5.மேலும் கேரட்டை வேகவைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது.

6.மேலும் கேரட்டை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்து சமைக்க வேண்டும் .அப்போது  அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.

7.கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்- வாக மாறுகிறது.

8.கேரட்  கண் பார்வையை தெளிவாக்குவதுடன் சரும பளபளப்புக்கும் உதவுகிறது.

9.  வைட்டமின் குறைபாட்டால் மாலைக்கண் நோய் வந்தால்  கேரட் குணமாக்கும்.