புளிப்பான பழங்களை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

பொதுவாக சிலர் உடல் எடையை குறைக்கிறேன் பேர் வழி என்று காலை உணவை தவிர்த்து விட்டு காலையில் சோர்வுடன் ஆபீஸ் செல்வர் .இது மிகவும் தவறு .இது நாளடைவில் நமக்கு அல்சர் போன்ற வயிற்று புண்ணை உண்டாக்கும் .அதனால் காலை உணவில் பின்வரும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1.காலையில் எழுந்தவுடன் டீ , காபி அருந்துவதால் உடலுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை. இதற்கு பதிலாக இளம் சூடான நீரை அருந்தலாம். .
2.பொதுவாகவே புளிப்பான பழங்களை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரைப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாக அமைந்துவிடும்.
3.காலையில் இனிப்பு சாப்பிடுவதால் உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
4.தயிர் காலையில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.
5.குளிர்பானங்கள் பருகுவது குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். .
6.காலையில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
7.காலையில் ஐஸ் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
8.வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், அது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.