சுக்குவுடன் லெமன் சேர்த்து குடித்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
leman tea

பொதுவாக சுக்குவுடன் வெற்றிலை சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை விலகும் .மேலும் சுக்கின் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.சுக்குவுடன் லெமன் சேர்த்து குடித்தால் பித்தம் விலகும் .பித்தத்தினால் உண்டாகும் அனைத்து நோய்களும் நம்மை விட்டு ஓடிவிடும் .
2.சுக்கை இடித்து நெற்றியில் பூசினால் தலை வலி ஓடிவிடும் .
3.மேலும் சுக்குடன் மிளகு சேர்த்து கஷ்யம் செய்து சாப்பிட்டால் உடல் அசதி பறந்து போய் விடும்  

sukku

4.இன்றைய நவீன காலத்தில் மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வு பிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
5.வாரத்திற்கு ஒருநாள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாம் உண்ணும் உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் தடுக்கலாம்.
 6.சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் தீராத மூட்டு வலியிலிருந்து குணம் பெறலாம்.
7.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை தனித்தனியாக வாங்கி பொடி செய்து அதனை வெந்நீரில் காய்ச்சி குடித்தால் கடுமையான சளி மற்றும் கபம் விலகும்.