சுக்குடன் எந்த பொருளை சேர்த்து உண்டால் எந்த நோய் விலகும் தெரியுமா ?

.பொதுவாக இஞ்சி காய்ந்ததும் கிடைக்கும் பொருள்தான் சுக்கு என்று அழைக்கப்படுகிறது .இந்த சுக்கு மூலம் பல நோய்களை குணமாக்கலாம் .உதாரணமாக சிலருக்கு ஜலதோஷம் வாட்டும் .அவர்கள் சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவைகளை போட்டு
கஷாயம் செய்து குடித்து வர, கடுமையான சளி மூன்றே நாட்களில் குணமாகும்.இது போல் சுக்கின் பல்வேறு நன்மைகள் குறித்து பார்ப்போம்
1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து,, வலியுள்ள கை, கால் மூட்டுகளில்
பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2.கொஞ்சம் சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
3.கொஞ்சம் கருப்பட்டி, மிளகு,சுக்கு சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்தால்
சோர்வு, உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
4.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,தீராத
வாயுத்தொல்லை நம்மை விட்டு விலகும் .
5.சிலருக்கு தலை வலியிருக்கும் .அப்போது சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில்
தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
6.சிலருக்கு வாந்தியிருக்கும் .அவர்கள் சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால்,திடீர் குமட்டல் தொடர் வாந்தி, மாறிவிடும்.
7.சிலர் மது அருந்தி மட்டையாகிவிடுவர் .அவர்கள் சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, நன்றாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை மாறும்.
8.சீரகம், மிளகு, சுக்கு, பூண்டு சேர்த்து கஷாயம் செய்து
காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
9.சுக்கு, வேப்பம்பட்டை இவற்றை போட்டு கஷாயம் செய்து குடித்துவந்தால்
ஆரம்பநிலை வாதம் குணமாகும்.