வெள்ளரிக்காய் சாறை அரைத்து முகத்தில் பூசி வந்தால் நேரும் மாற்றம் என்ன தெரியுமா ?

 
cucumber

பொதுவாக வெள்ளரிக்காய்  நம் உடல் நலனுக்கு பல நண்மைகளை அளிக்கும் ஆற்றல் கொண்டது .இந்த வெள்ளரிக்காயை நாம் எப்படி பயன் படுத்தினால் நம் முகத்துக்கும் ,உடலுக்கும் நன்மைகளை அளிக்கும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்

1.வெள்ளரிக்காயில் உள்ள மாங்கனீசு மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்திற்கு குணப்படுத்தும் தன்மையை அளிக்கிறது.

2.வெள்ளரிக்காயை ஒரு மாய்ஷரைசராகவும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்  முகத்தின் கருமையை போக்கி நிறத்தை மேம்படுத்துகிறது.

3.வெள்ளரிக்காயை பிற இயற்கை பொருட்களான தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

curd

4.சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் காணப்படும் .இந்த கருவளையங்களுக்கு சிறந்த மருந்து வெள்ளரிக்காய்.

5.வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்து கொள்ளும் போது குளிர்ச்சியை அளித்து கருமையை போக்கி கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

6.வெள்ளரிக்காய் சாறு அல்லது அதனை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தின் கருமை மாறி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

7.பொதுவாக வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் உள்வீக்கத்தை குறைத்து பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்குகிறது.

8.பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வெள்ளரிக்காய். இது சருமத்தை இருகச் செய்து சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்தை மாற்றுகிறது.

9.வெள்ளரிக்காய சூரிய கதிர்களால் ஏற்படும் டேனை போக்கி ஒரு இயற்கை பிலீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது.

10.வெள்ளரிக்காய் முகத்தில் உள்ள தழும்புகளை மறையச் செய்கிறது.