பட்டைத்தூளும் தேனும் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?

 
baby

பொதுவாக இருமல் வந்தால்  குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்தரிக்கு ஓடாமல் வீட்டிலேயே சில வீட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தலாம் .அது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்

home remedy for cough

1.உங்கள் குழந்தை இன்னும் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தால் வறட்டு இருமலுக்கு தாய்ப்பாலே சிறந்த மருந்து. அதையே கொடுங்கள்.
2.உங்கள் குழந்தை இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் சின்ன தலையனை அல்லது டவலை மடித்து, குழந்தையின் தலையின் கீழ் வைக்கவும்.
3.வெந்நீரை பாத் ரூம் பக்கெட்டில் ஊற்றி கதவை அடைத்துக்கொண்டு நீங்களும் குழந்தையும் பாத் ரூமில் இருங்கள். அந்த ஸ்டீம் குழந்தைக்கு நல்லது செய்யும்.
4.. பட்டைத்தூளும் தேனும் சரியான அளவில் கலந்து கொடுத்தால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் வறட்டு இருமல் சரியாகும்
5.தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சீரக தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் ஆறியதும் அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.
6.வீட்டிலே செய்யகூடிய சிக்கன் சூப்பில் சத்துகள் ஏராளமாக உள்ளன. பூண்டு சேர்த்து சிக்கன் சூப் வைத்துக்கொடுங்கள்.
7..டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் இருமலை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் வறட்டு இருமலை விரைவில் விரட்ட வழி வகுக்கும்.