கொத்தமல்லி சாறு கூறு போடும் நோய்கள்
பொதுவாக கொத்தமல்லி நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடியது .உதாரணமாக
கொத்தமல்லி சாறு கடுமையான வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது. குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதி அடையும்.மேலும் கொத்தமல்லி மூலம் நாம் அடையும் பயன்களை பற்றி இந்த பதிவில் காணலாம் .
1.கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. 2.மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு கொத்தமல்லி மருந்தாகப் பயன்படும்.
3.கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. 4.கொத்தமல்லியை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். எனவே அளவோடு சாப்பிடுவது மிகவும் நல்லது.
5.கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும்.
6.கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.
7.இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
8.இக்கீரையை எண்ணெய்யில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.
9.கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும். பற்களுக்கு உறுதியை அளிக்கும்.
10.பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் கொத்த மல்லி தரும்.