ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து எடுத்து கொண்டால் எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?

 
yelakkai

பொதுவாக ஜலதோஷம் பிடித்துக்கொண்டு விட்டால் நம்மை பாடாய் படுத்தி விடும் .அதனால் இந்த ஜலதோஷத்திற்கு என்ன இயற்கை வைத்தியம் செய்யலாம் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம் .
1.ஒரு பாத்திரத்தில்  சுக்கு இரண்டு ஸ்பூன், கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் இவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து  விடவும் .
2.இந்த கஷாயத்தை குடித்தால் சளித்தொல்லை உங்களை விட்டு ஒரே ஓட்டம் ஓடிவிடும்

ginger

3. ஒரு பாத்திரத்தில்  துண்டு இஞ்சியின்  சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து வெந்நீரில் கொதிக்க வைத்து விடவும் .
4.இந்த கஷாயத்தை தினமும் மூன்று நேரமும் குடித்து வந்தால் நெஞ்சுச்சளி பஞ்சாய் பறந்து போகும் .

5.ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் ஒரு ஸ்பூன் நெய் கலந்து விடவும்
6.இதை தினமும் எடுத்துக்கொண்டால் சளி தொல்லை இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்

7. சீரகத்தை எடுத்து பொடியாக்கி அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து விடவும் .
8.இதை ஒரு நாளைக்கு இரண்டு நேரம் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் உங்கள் உடலை விட்டு போய் விடும்  .