வெறும் வயிற்றில் தேங்காய் பால் அருந்தி வர நம் உடல் பெரும் நன்மைகள் ..

பொதுவாக இளஞ் சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால் சளி பிரச்சினை தீரும் .மேலும் தூக்கமின்மயை போக்கி ,எடை குறைக்க உதவும் .இது போல வெறும் வயிற்றில் நாம் ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிடலாம் என்று இப்பதிவில் காணலாம்
1. வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடித்தால் சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் ,மேலும் ஜீரக தண்ணீர் குடித்தால் நமக்கு செரிமான பிரச்சினை இருக்காது .
2.மேலும் காலையில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை ஜூஸாகவோ அல்லது பழமாகவோ சாப்பிடலாம் ,மேலும் கேரட் ,முள்ளங்கி போன்ற காய்களை பச்சையாக சாப்பிடலாம் .
3.காலையில் வெறும் வயிற்றில் முட்டை சாப்பிட்டால் மெட்டபாலிசம் அதிகரித்து ஆற்றலைத் தரும்
4.காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தினால் மல சிக்கல் தீர்ந்து ,கழிவுகள் வெளியேறும்
5.காலையில் பப்பாளி பழத்தை சாப்பிடுவது கெட்ட கொழுப்பை குறைத்து பல்வேறு இதய நோய்களைத் தடுக்கவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கவும் உதவி செய்கிறது.
6.வெறும் வயிற்றில் தேங்காய் பால் அருந்தி வர வயிற்றில் உள்ள புண்கள் விரைவில் ஆறும்.