பல்லில் கிராம்பை வைத்தால் பல்லில் நேரும் அதிசயம்

 
clove

பொதுவாக கிராம்புக்குள் ஏராளமான மருத்துவ நன்மைகள் மனிதனுக்கு அடங்கியுள்ளது . அந்த நன்மைகளை பட்டியல் போட்டுள்ளோம் படித்து பயன் பெறுங்கள்
 1.நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா நம்மை விட்டே ஓடி விடும் .
2.கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.
3.கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

health tips of cloves in hot water

4. கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பல், தொண்டை வலிகளை போக்கும்.
5.மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அமிலத்தன்மை (அசிடிட்டி) ஆகியவற்றை குணமாக்குவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும்.
6.பல்லில் வலி இருக்குமிடத்தில் கிராம்பை வைத்தால் வலி மரக்கும். கிராம்பை வெந்நீருடன் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டாலும் பல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
7. கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, சைனஸ் மற்றும் ஆஸ்துமா தொல்லைகளிலிருந்து விடுபடவும் கிராம்பு உதவும்..
8.கிராம்பில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் இ, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தையமின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்களும், அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் இயல்புகளும்  உள்ளதால் நாம் பய்னபடுத்தி பயன் பெறலாம் .