கிராம்பு நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் என்னாகும் தெரியுமா ?

 
health tips of cloves in hot water

கிராம்பு நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கும் வாசனைப் பொருட்களில் ஒன்று கிராம்பு. இது உணவிற்கு சுவை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

clove

2.ஏனெனில் இதில் நார்ச்சத்து பொட்டாசியம் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.

3.கிராம்பு நீரை கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

4.கிராம்பு நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடவும், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்தும் ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

5.மேலும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது குறிப்பாக ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.

6.மூட்டு தசைகள் குடல் வயிறு போன்றவற்றில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கவும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.