குழந்தைக்கு அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் இந்த பால்

 
baby

பொதுவாக தாய்ப்பாலில் அனைத்து வித ஆரோக்கியமும் அடங்கியுள்ளது .இதன் மற்ற நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.தாய்ப்பாலில் அனைத்து சத்துக்களும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டமும் அதில் இடம் பெற்றுள்ளது.
2.கார்போஹைட்ரேட்டுகள், லிபிடுகள், புரதம், வைட்டமின், தாதுக்கள், தண்ணீர் என அனைத்துமே அதில் உள்ளதால் குழந்தைக்கு ஆரோக்கியம் காக்கப்படுகிறது

child
3.குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்த பிறகு பால் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். மெதுவாக பசும்பாலைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
4.கூடவே ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
5.திட உணவுகளையும் மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.
6.குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதால் அவர்களின் வளர்ச்சி, அறிவுத்திறன், வலிமை, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மேம்படுமாம். நோய்களும் அத்தனை சீக்கிரம் அண்டாதாம்
7.இன்றைய இளம் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
8.பிறந்த ஆறு முதல் பனிரெண்டு மாதங்களில் பெரும்பாலான குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் அளவை குறைக்க ஆரம்பித்து விடும்.