கோடை காலத்தில் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

 
chicken

பொதுவாக தினமும் சிக்கன் சாப்பிடுவதனால் பல பாதிப்புகள் உண்டாகும் .அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
 
1.நீங்கள் வறுத்த சிக்கனை அதாவது சிக்கன் 65,தந்தூரி சிக்கன் ,என்று தினமும்  சாப்பிடுபவர் எனில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
2.தொடர்ச்சியாக அதை தினமும் சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம்.
3.குறிப்பாக கோடை காலத்தில் சிக்கன் அதிக ஹீட்டை உண்டாக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

chicken
4.மேலும் இந்த சிக்கனை வழக்கமாக சாப்பிடுவது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவினை அதிகரித்து நம் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் .
5.மேலும் சிக்கனின் சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்ற உடல் உபாதைகளை உண்டாக்கலாம்
6.மேலும் தினசரி சிக்கன் உட்கொள்ளப்படும் போது நம் உடலின் இதய பகுதியில் கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
7.கொழுப்பு அதிகரிக்கும்போது நம் உடலின் முக்கிய பகுதியான இதயத்தில் பிரச்சினை ஏற்படும்.அதனால் இந்த சிக்கனை அளவாக சாப்பிட்டு வளமாக வாழ்வோம்