தொப்புளில் சில துளிகள் விளக்கெண்ணெய் வைத்தால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக உடல் உஷ்ணத்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் ஆரோக்கியத்தை இழந்து விடுகிறது .இதனால் முடி உதிர்வு ,வயிற்று வலி போன்ற பிரச்சினைகளும் உண்டாகிறது .அந்த உஷ்ணத்தை இயற்கை வழியில் எப்படி குறைக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.ஆட்டுப்பால் குடித்து வருபவர்களுக்கு உஷ்ணம் குறையும் .
2.மேலும் உடல் உஷ்ணம் குறைய சந்தனாதி தைலம் ,பருப்பு கீரை ,நெல்லிக்காய் ,வெண்பூசணி ,கல்யாண முருங்கை ,மனத்தக்காளி ,திராட்சை அருகம்புல் ,கற்றாழை சாறு போன்றவைகளை உணவில் சேர்த்து வரலாம் .
3. இளநீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடானது குறைய தொடங்கும்.
4.உடல் சூட்டை குறைக்க பழங்கள் மற்றும் பழச்சாறினை அடிக்கடி எடுத்துகொள்வது நல்லது.
5. தினமும் ஜீரகத் தண்ணீரை குடித்து வரலாம்.
6. வாரத்தில் 2 முறை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி உடல் எப்போதும் குளிர்ச்சியான நிலையில் இருக்கும்.
7.. வாரத்தில் ஒரு முறை இரவு உறங்குவதற்கு முன் தொப்பிளில் 2 துளிகள் விளக்கெண்ணெய் வைத்து உறங்குங்கள்.