கேன்சர் நோய் தாக்காமல் பாதுகாக்கும் வெங்காயத்தாளை பத்தி தெரிஞ்சிக்கோங்க

 
onion

பொதுவாக வெங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது .அதில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் பல சத்துக்கள் அடங்கியுள்ளது.இதன் ஆரோக்கியம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்
1. வெங்காயத்தாளில்  கந்தகச்சத்து அதிகளவில் உள்ளதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்

cancer
2.ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளதால் இதை நாம் விருப்பமுடன் சாப்பிட வேண்டும்
3.இவ்ளளவு ஆரோக்கியம் உள்ள வெங்காய தாளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளதால் நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை புரியும் .
 4.குறிப்பாக வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், மனிதனுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு நிரந்தர நிவாரணம் வழங்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்
5.வெங்காய தாளில்  உள்ள பெக்டின் என்னும் வேதி பொருள் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்து நம்மை கேன்சர் நோய் தாக்காமல் பாதுகாக்கிறது .
6.மேலும் இந்த ஆரோக்கியமான வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்கி நம்மை கண் பிரச்சினை வராமல் பாதுகாக்கிறது