இதெல்லாம் செஞ்சா உடலில் ரத்த அழுத்தம் இல்லாமல் வாழலாம்

 
bp

பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஆபீசில் மேலதிகாரியின் குடைச்சல் முதல் குடும்ப செலவுகளை சமாளிப்பது வரை எத்தனையோ பிபி அதிகரிக்கும் விஷயங்கள் நடக்கிறது .இந்த மன அழுத்தத்தை எப்படி சமாளித்து நாம் பிபி இல்லாமல் ஹாப்பியாக இருப்பது எப்படி என்று பார்க்கலாம்

1.ரத்த அழுத்தத்தை குறைக்க முதலில் மென்மேலும் சாப்பிட்டு கொண்டேயில்லாமல் சாப்பிட்ட உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்தவேளை உணவு அருந்துவது நல்லது.  நீண்ட விரதம் இருக்க கூடாது

bp

2.ரத்த அழுத்தத்தை குறைக்க  எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். 3.மேலும் மாமிச வகைகள் ,புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், பருப்பு வகைகள், வாயுவைப் பெருக்கும் இந்த மாதிரியான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து வந்தால் பிபி அதிகமாகாமல் காக்கலாம்
4.மன அழுத்தத்தை உண்டாக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
 
5.இரத்த அழுத்தம் உள்ளவர்கள்  குப்பைமேனி க்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.
6.கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
7.காலை உணவை தவறாமல் எடுத்து கொண்டு வாக்கிங் ,எக்சர்சைஸ் செய்து வந்தால் பிபி இல்லாமல் ஹாப்பியாக வாழலாம்