பெண்கள் உலர் திராட்சை மற்றும் பாதாம் சாப்பிடுவது எந்த நோய் வராமல் தடுக்கும் தெரியுமா ?

 
bone

பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் உள்ள சூரிய ஒளியில் தினம் அரை மணி நேரம் நாம் நின்றாலே போதும் நமக்கு தேவையான விட்டமின் டி உடலுக்கு கிடைத்து விடும் .இப்பதிவில் எலும்பு பிரச்சினை வராமல் எப்படி காக்கலாம் என்று நாம் பார்க்கலாம்
1. இன்றைக்கு இருக்கும் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் ,குளிரூட்டப்பட்ட அறை அலுவலகமும் சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் டி க்கு  இடம் கொடுக்காது .அதனால்தான் இன்று பலருக்கு இளம் வயதிலேயே மூட்டு வலி முதல் இடுப்பு வலி வரை வந்து அல்லல் படுகின்றனர்
2.இந்த தலைமுறையில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எலும்பு சார்ந்த பிரச்சனை இயல்பாகவே ஏற்படுகிறது.

bone
3.வயதுக்கு வரும்போது நமது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து எலும்பு அடர்த்தியை மோசமாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது .
4.இதுவே பெண்களுக்கு முழங்கால்கள், கீழ் முதுகு மற்றும் கால்களில் வலி மற்றும் உடல் வலிக்கு காரணமாக அமைகிறது. எனவே கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் இதை தவிர்க்கலாம்
5.இந்த எலும்பு ஆரோக்கியம் தரும் உணவுகளான பால், தயிர், பாதாம், கீரை, வெள்ளை பீன்ஸ்,கருப்பு உளுந்து மற்றும் மீன் ஆகியவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
6.இத்துடன் உலர் திராட்சை, பாதாம் போன்றவற்றையும் சாப்பிடுவது நல்லது.