கொத்தமல்லியை கொதிக்க வச்சி குடிப்பது எந்த நோய்க்கு சிகிச்சை தெரியுமா ?
இந்த பதிவில் தைராய்டு நோய் உங்களுக்கு உள்ளதா என்று எப்படி தெரிந்துக்கொள்வது மற்றும் உணவுகளில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.தைராய்டு நோயிருந்தால் அடிக்கடி கவலை ,மன சோர்வு ,இதய துடிப்பில் வேகம் ,அடிக்கடி மலம் கழித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும் .இந்த தைராய்டு நோய் எப்படி இயற்கையான முறையில் குணமாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.தைராய்டு நோய் பிரச்சினை உள்ளவர்கள் தங்களது உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
2.தைராய்டு நோய் உள்ளவர்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
3.தைராய்டு நோய் உள்ளவர்கள் பச்சை இலை காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் ,அடிக்கடி எடுத்து கொள்ளலாம்
4.தைராய்டு நோய் உள்ளவர்கள் விதைகள் மற்றும் துத்தநாகம் நிறைந்த பயறு, சுண்டல், பீன்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
5.தைராய்டு நோய் உள்ளவர்கள் அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
6.தைராய்டு நோய் உள்ளவர்கள் கடற்பாசி, மீன், பால் மற்றும் முட்டை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது
7.மேலும் இயற்கையான முறையில் தைராய்டு நோய் குணமாக்க இந்த தேநீரை குடித்து பாருங்க.
8.ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 2 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதை சேர்த்து விடுங்கள்
9. அந்த மூலிகையை 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
10.பின் அந்த கலவையை வடிகட்டி அதனுடன் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து கொள்ளவும் .
11.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது தைராய்டு நோய் உள்ளவர்களுக்கு நல்லது