கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ள எந்த பிரச்சினையை தடுக்கலாம் தெரியுமா ?

 
health tips of cloves in hot water health tips of cloves in hot water

பொதுவாகவே வாய் துர்நாற்றத்திற்கு காரணம் வயிற்றில் உள்ள அல்சர் புண் காரணம் .ஒரு வகை பாக்டீரியாவால் உருவாகும் அந்த அல்சர் வாயில் துர்நாற்றம் வீச வைக்கிறது ,மேலும் வயிற்றில் சுரக்கும் அந்த அமிலம் வாயில் உள்ள பற்களை சேதப்படுத்துகிறது .இந்த துர்நாற்ற பிரச்சினையை எவ்வாறு தவிர்க்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்  
1. இந்த பிரச்சினை உள்ளோர் இதற்கென்றே விற்கும் சூயிங் கம் யூஸ் செய்யலாம் .
2.மேலும் வெங்காயம் ,பூண்டு போன்றவற்றை தவிர்க்கலாம் .புகை பிடிக்கும் பழக்கத்தை விடலாம்
3.வாய் துர்நாற்றம் உள்ளவர்கள்காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் நல்லண்ணெய் வாயில் விட்டு மூன்று நிமிடம் வரை வாயை நன்கு கொப்பளிக்கவும்.

teeth
4.வாய் துர்நாற்றம் உள்ளவர்கள்தினமும் காலையில் எழுந்துததும் பல் துலக்கிய பின் தண்ணீர் குடிப்பது அவசியம்.
5. காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம்.
7. வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
8.வாய் புத்துணர்ச்சியாக இருக்க சில புதினா இலைகளை மென்று சாப்பிடலாம்.புதினா உங்களது வாயில் உள்ள பாக்டீரியாவை அழித்து ஆரோக்கியம் கொடுக்கிறது .