குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் கண் பார்வைக்கும் இது சிறந்த மருந்து

 
baby leg

பொதுவாக வசம்பு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ,கண் பார்வைக்கும் இது சிறந்த மருந்து ஆகும் .இந்த வசம்பின் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.சிறு குழந்தைக்கு வயிறு வீக்கம் மற்றும் வயிறு உப்பிசம் ஏற்பட்டால் வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து கொடுத்து வந்தால் அந்த பிரச்சினை சரியாகும் ,
2.மேலும் குழந்தை படுத்திருக்கும் படுக்கை சுற்றி வசம்பு பொடியை தூவி விட்டால் அந்த குழந்தைக்கு நோய் தொற்று மற்றும் கிருமி தொற்று ஏற்படாமல் காக்கலாம் .

baby
3.இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலன் தருகிறது.
4.நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருப்பவர்கள் வசம்பு மற்றும் அதிமதுரம் இரண்டையும் பொடியாக்கி சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வந்தால் இருமல் வேகமாக குணமடையும்.
5.வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுதல் அல்லது படுக்கையை சுற்றி தூவி விடுவதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.
6.வாகனங்களில் பயணம் செய்யும் போதும், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதாலும் சிலருக்கு வாந்தி குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் இவர்கள் வசம்பை நன்கு பொடியாக்கி வாயில் போட்டு சிறிதளவு இதமான வெண்ணீரை குடித்தால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.