இந்த காய் மூலம் நம் எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக கொடியாக படரும் காய்கறிகளில் முக்கியமானது அவரைக்காய் .அந்த அவரைக்காயில் நமக்கு பல நன்மைகள் அடங்கியுள்ளன .இதன் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த காய் அதிக நார்சத்து உள்ளதால் இவை நமக்கு ஊட்ட சத்துடன் நம்மை பாதுகாக்கும் .மேலும் இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ,
2.இதில் நம் இதய நலனுக்கு தேவையான பல மூல பொருட்கள் உள்ளது .
3.மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினையுள்ளவர்கள் இந்த காயை அதிகம் சேர்த்து கொண்டால் அந்த நோய்கள் கட்டுக்குள் இருக்கும்
.
4.அவரைக்காயில் கால்சியம் சத்து கணிசமான அளவில் உள்ளது. . எனவே இந்த காய் மூலம் நம் எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
5.அவரைக்காயில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாத்து நமக்கு அளவற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும்
6.அவரைக்காயின் சுவை மன அழுத்தத்தை போக்குகிறது.
7.அவரைக்காயில் எல்-டோப்பா என்ற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இதுதான் சுவையைக் கொடுக்கிறது. அந்த சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.