கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
asthma

பொதுவாக பலருக்கும் இந்த காற்று மாசுபாடு காரணமாக வீசிங் மற்றும் ஆஸ்த்மா கோளாறு இருக்கிறது 
இயற்கை தீர்வுகள் மூலம் வீசிங்  பாதிப்பை முற்றிலும் போக்குவது அல்லது கட்டுக்குள் வைப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் 
1.மஞ்சள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜெனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது 
2.மேலும் , மஞ்சள் வீசிங் பாதிப்புக்கு  சிறந்த சிகிச்சையையும் அளிக்கிறது. 
3.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அரைத்த மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். 
4.இப்படி குடிப்பதால் , வீசிங் குறைகிறது. ஆஸ்துமா பாதிப்பும் கட்டுக்குள் இருக்கும் .
5.அடுத்து கடுகு எண்ணெய், மூக்கில் சளி சேருவதை குறைக்கும் . இதனால் சுவாச மண்டலம் சீராக செயலாற்றி ,ஆஸ்துமா குணமாகும் .
6.கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் ஆஸ்துமாவுக்கு நிவாரணம் கிடைக்கும் . 
7.கடுகு எண்ணெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்கி,  நுகர்வதால் உங்களுக்கு ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்.
8.எலுமிச்சை சாற்றை தினமும் பருகுவதால்  வீசிங் ஏற்படுவதை தடுக்கிறது. 
9.. தினமும் சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் சுவாச பாதை சீராகிறது மற்றும் சளி மற்றும் இருமல் குறைகிறது.
10.. ஆர்கானிக் தேனின் வாசனையை நுகர்வதன் மூலம் வீசிங்கை கட்டுப்படுத்தலாம்.