அருகம்புல் சாறை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக .உடலை பருமனை குறைக்க பலர் ஜிம்மில் பணம் செலவழித்து காலத்தை விரயம் செய்கின்றனர் .இந்த உடல் பருமனை செலவே இல்லாமல் வீட்டில் உள்ள் எளிய உணவின் மூலம் குறைக்க சில வழிமுறை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. உடல் பருமன் குறைக்க விரும்புவோர் சோம்பு கலந்த தண்ணீரை தினம் ஒரு சொம்பு அளவிற்கு குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும் .
2.மேலும் பூண்டு வெங்காயம் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்
3. உடல் பருமனை குறைக்க பப்பாளி பழம் சாப்பிடலாம் .
4.அது மட்டுமல்லாமல் அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் போன்றவற்றை பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பர் .
5. உடல் பருமனை குறைக்க சுரைக்காயை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிடலாம் .மேலும் லெமன் தேநீர் குடிக்கலாம்
6. உடல் பருமனை குறைக்க வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் உடலில் சதை போடுவதைத் தடுக்கலாம்.கூடவே வாக்கிங் போனாலும் நல்ல பலன் உண்டு