சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த காயை தொடக்கூடாது தெரியுமா ?
பொதுவாக நெல்லிக்காய் நம் உடலுக்கு நன்மை செய்வது போல் சில தீங்கையும் சிலருக்கு உண்டாக்கும் .
நெல்லிக்காய் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
1.பொதுவாகவே நெல்லிக்காயில் எக்கச்சக்க நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்
2.ஆனால் சில நோயாளிகள் நெல்லிக்காயை சாப்பிடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. 3.நெல்லிக்காயில் வைட்டமின்கள் நார்ச்சத்து பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த கனியாகவே இருக்கிறது.
5.மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
6.குளிர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படும்போது நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 7.ஏனெனில் இது குளிர்ச்சியானது.
8.இது உடல் நிலையை மேலும் மோசம் அடையச் செய்யும்.
9.மேலும் ரத்த சர்க்கரையளவு குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது.
10.இது மட்டும் இல்லாமல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது சிறுநீரக செயலிழப்பு ஏற்படவும் காரணமாக அமைந்துவிடும்.
11.மேலும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
12.ஏனெனில் அப்படி செய்ய மறந்தால் ரத்த நாளங்கள் சிதைந்து ரத்தப்போக்கு அபாயத்தை ஏற்படுத்திவிடும்.