நெல்லிக்காய் சாறு அடிக்கடி குடித்து வர எந்த நோய் வராமல் தடுக்கலாம் தெரியுமா ?

 
amla

பொதுவாக நெல்லிக்காய் போன்ற  கசப்பு துவர்ப்பு உள்ள காய்கள் பல நோய்களை குணப்படுத்துவதாக கருதப்படுகிறது.பொதுவாக நாம் உண்ணும் உணவானது நம் உடலில் சுரக்கும் பித்தம் சேர்ந்து ஜீரணம் வருகிறது. இந்த பித்தம் சுரக்கும் உறுப்பு பித்தப்பையாகும். இதில் ஏற்படும் கற்கள் போன்றவற்றை கரைக்கும் வல்லமை கொண்டது நெல்லிக்காய் சாறு.இது போல நெல்லிக்காய் மூலம் நாம் அடையும் எண்ணற்ற பயன்கள் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்

amla

1.பொதுவாக எந்த காய் கனிகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள கனி எதுவென்றால் நெல்லிக்கனி என்றால் அது மிகையாகாது .

2.ஒருவர் ஆரோக்கியத்துக்கு ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் குறைந்த பச்சம் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்தை பெறலாம்.

3.நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை .உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளது.

4.நெல்லிக்காயில் விட்டமின் சி சத்து இதில் இயற்கையாகவே இருப்பதால் அளவுடன் இதை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.

5.இந்த நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும்.

 6.நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள் உடலில் வயது மூப்பு அதாவது வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

7.ஒருவர் நெல்லிக்காய் சாரை அடிக்கடி குடித்து வரலாம் .இப்படி குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

8.சிலருக்கு ஆஸ்த்மா இருக்கும் .தினமும் நெல்லிக்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து இரண்டு வேளை குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும்

9.நம் உடலில் கல்லீரல் என்பது நாம் உண்ணும் உணவில் அல்லது வேறு வடிவிலோ ரத்தத்தில் நச்சுக் கிருமிகள் சேரும்போது அதை நீக்கும் உறுப்பு .

10.ஒரு ஆரோக்கியமான கல்லீரலில் ஏற்படும் நோய் மஞ்சல் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு நெல்லிக்காய் சாறு அடிக்கடி குடித்து வர இந்த நோய் வராமல் நாம் கல்லீரலை பாதுகாத்து நம் உடலை பேணி பாதுகாக்கலாம்