சாப்பிட்டதும் இதெல்லாம் செஞ்சா உங்க ஆரோக்கியத்துக்கு கேடு

பொதுவாக இந்த பாஸ்ட் புட் கலாச்சாரத்தில் நாம் எப்படி சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்று பட்டியலிட்டுள்ளோம் ,அவற்றை படித்து பின் பற்றி ஆரோக்கியமாய் வாழுங்கள் .
.
1. எப்போதும் குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிட்டபிறகு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
2.எப்போதும் உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் வாயுவை உருவாக்கும்.
3.பொதுவாக எப்போதும் சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை உள்ள அமிலங்கள் உணவில் உள்ள புரதங்களுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.
4.சிலருக்கு உணவு உண்டபின் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும் .இப்படி இருந்தால் , புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
5.சிலர் உணவு உண்டபின் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்துவர் . அப்படி செய்ய கூடாது ,ஏனெனில் . சாப்பிட்ட உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், செரிமானக் கோளாறு ஏற்படும்.
6.சிலர் உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்வர் .
7.அப்படி சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது.
8.சிலர் எக்சசைஸ் செய்துவிட்டு உடனே சுவீட் ,ஜூஸ் ,கேக் போன்றவற்றை உண்பார்கள் .
9.இது கலோரிகளை அதிகரிக்க செய்து விடும் .அதனால் உடற்பயிற்சி முடித்து ஒரு மணிநேரம் கழித்து சாப்பிடலாம்